சாட்சிக்காரன் காலில் விழுந்தாற்போல என்ற பழமொழிக்கேற்ப, தவறு செய்த காதல் ஜோடி எஸ்.பியிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டது.
இளம் காதல் ஜோடிகள் இன்றளவில் தங்கள் பார்க்கும் வீடியோவில் வரும்படி தங்களின் நடத்தையை மாற்றிக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே காதல் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தனது காதலியை வாகனத்தின் பின்புறம் டேங்கில் திரும்பி அமர வைத்து இருவரும் இருக்க கட்டிப்பிடித்தபடி பயணம் செய்து வருகின்றனர்.
இவ்வாறான சர்ச்சை செயல்கள் மோட்டார் வாகன விதிமீறல் என்பதாலும், விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாலும் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்ட வருகின்றது. சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டு சிக்கும் ஜோடியில் காணொளியை வைத்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஷாஷி மோகன் சிங் அலுவலக வேலையாக குங்குரி பகுதியில் திரும்பிக் கொண்டு இருந்தார். அந்த சமயம் வினய் என்பவர் தனது 18 வயதுடைய காதலை சுஹானி என்பவரை தேசிய நெடுஞ்சாலை 43-யில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான வகையில் அமர வைத்து அழைத்து செல்வதை கண்டார். இதனை தொடர்ந்து காதல் ஜோடியை வழிமுறைத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறிய எஸ்பி அவர்களை கண்டித்து அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார், மேலும் அவர் பதிவு செய்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வெளியாகி உள்ளது.
हाईवे पर रोमांटिक स्टंट.. मंगेतर को इम्प्रेस करने को युवक ने टंकी पर उलटा बैठा दौड़ाई बाइक.. SP ने पकड़ लिया pic.twitter.com/vK3GVgfofY
— Khabari Lal Tv (@khabarilaltv) May 12, 2024