
டேஸ்டியான அக்கார வடிசல் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..??
பல கோயில்களில் பிரசாதமாக இந்த அக்கார வடிசல் கொடுப்பார்கள். இதனுடைய சுவையும் மணமும் சூப்பராக இருக்கும். அக்கார வடிசல் என்றால் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. இந்நிலையில் டேஸ்டியான அக்கார வடிசல் கோயில்களில் கொடுக்கும் பிரசாத சுவையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்வம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு எடுத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை நன்கு ஊறவைத்து பின்பு அரிசியோடு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் வெல்ல கரைசல் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு சிறிதளவு பால் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி கலந்து இறக்கவும். சுவையான அக்கார வடிசல் ரெடி.