
தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுசி கணேசன். ‘விரும்புகிறேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய திரைப்படங்களை தமிழ் மொழியில் இயக்கியுள்ளார். மேலும் இவர் 2013 ல் ஷார்ட்கட் ரோமியோ என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.
தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தில் ஹே கிரே என்ற திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலக திரை கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தில் ஹே கிரே என்ற திரைப்படத்தில் ஊர்வசி ரவுடேலா, அக்ஷய் ஓபராய் மற்றும் வினித் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பல படங்கள் ஸ்பெஷல் எஃபக்ட்டுகள் மூலம் கதையின் வேகத்தை கூட்டினாலும் சுசி கணேசன் திரைப்படம் அவரின் திறமையான எழுத்து மற்றும் இயக்கத்தின் மூலமாகவே மிகச்சிறப்பாக வந்திருப்பதாக உலக சினிமா விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்ட சுசி கணேசன் “இந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உலக சினிமாவில் பரீட்சையமிக்க நபர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.