• September 24, 2023

“ட்ரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது”- விவேக் ராமசாமி..!!

டொனால்ட் ட்ரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது” இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி  பேச்சு.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் அவர்களும் குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதே போல அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சியைச் சார்ந்த இந்திய வம்சாவளியினர் விவேக் ராமசாமி நிக்கிஹாலை உட்பட பலர் களமிறங்கி உள்ளனர்.

விவேக் ராமசாமிக்கு ஆதரவுகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. மேலும் அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் நன்கொடையும் குவிந்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது. ஆனால் விவேக் ராமசாமி அவர்களுக்கு அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்  ட்ரம்புடன் சேர்ந்து துணை அதிபர் பதிவிக்கு போட்டியிடுவேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் “டிரம்புக்கும் தனக்கும் சில விவகாரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கை ரீதியாக 90% எங்களுக்கு இடையில் நல்ல உடன்பாடே உள்ளது. கொள்கை மற்றும் வர்த்தகம் தொடர்பான திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு தன்னால் எடுத்துச் செல்ல முடியும்” என்று விவேக் ராமசாமி கூறியிருக்கிறார்.

Read Previous

கலக்கத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்..!! ஜெயிலர் பட வெற்றிதான் காரணமா..?

Read Next

பிரிட்டனில் 1.5 லட்சம் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular