பொதுவாக நாம் வெளியூர்களுக்கு ரயிலிலோ, பேருந்திலோ செல்லும்போது முன்பதிவு செய்துவிடுவது வழக்கம். அப்படி முன்பதிவு செய்யும்போது சாதாரண டிக்கெட்டின் விலையை விட சற்று குறைவாகவே இருக்கும். அதேபோல், ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று பெங்களூரு – கொல்கத்தாவிற்கு செல்லும் ஹவ்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சாதாரணமாக ஒரு ரயிலில், இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டியின் விலை 2900 ஆக இருக்கும். ஆனால் முன்பதிவில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (2AC) சுமார் 10,100 க்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த டிக்கெட்டின் புகைப்படத்தை பயணம் செய்த ஒருவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் பயணிகள் அனைவரும் பணம் அதிகரித்து விற்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பொதுவாக இவ்வாறு டிக்கெட் முன்பதிவில் போலியாக அதிக வசூல் உயர்த்தி வாங்கப்படுவது குறித்து அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.