
அன்றாட வாழ்வில் பொதுமக்கள் தற்போது செல்போன்களை பயன்படுத்துவது அதிகம் ஆகிவிட்டது. அதேபோல் வாட்ஸாப்ப், பேஷ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை செயல்களையும் அனைவரும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் அதிலும் குறிப்பாக வாட்ஸாப் செயல்களின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது இந்த செயலிகளுக்கு சில அடிமையாகவே மாறிவிட்டனர் என்று கூறலாம். அந்த வகையில் தற்பொழுது வாட்ஸாப் நிறுவனம் தங்களின் பயனாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. வாட்ஸ் அப்பில் கல்வி, தொழில், பணபரிமாற்றம் முதலான அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ் அப் நம்பருக்கு பதிலாக யூசர் நேம் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சத்தின் படி இனி நமது போன் நம்பரை மற்றவர்கள் பார்க்க இயலாது. நாம் யாருக்காவது மெசேஜ் செய்தால் நாம் போன் நம்பருக்கு பதிலாக அவர்கள் நம் பயனருடைய பெயரை மட்டுமே காண முடியும். இதற்கு முதலில் நீங்கள் ஒரு தனிப்பட்ட பயனரின் பெயரை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.