
விவசாயத் தொழில் ஈடுபட்டு பலரும் நஷ்டம் அடைந்ததாக தெரிவிக்கும் நிலையில் இந்த வருடம் தக்காளி விலை ஏற்றம் அடைந்ததால் ஒரு சில விவசாயிகள் கோடீஸ்வuuhய் மாறி உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கவுடிபள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் மகிப்பால் ரெட்டி இவர் ஒரு விவசாயி ஆவார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் இவர் அதன் பின் படிப்பில் நாட்டம் இல்லாமல் விவசாயத்தில் ஈடுபட தொடங்கினார். இவர் தக்காளியுடன் நெல் சாகுபடியும் செய்துள்ளார். ஆனால் நெல் சாகுபடியில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தக்காளி சாகுபடியை தொடங்கியுள்ளார்.. இவரிடம் இருந்த 8 ஏக்கர் நிலத்திலும் தக்காளி மட்டும் பயிரிட்டுள்ளார்.
தக்காளிகளை ஜூன் 15ஆம் தேதி சந்தைக்கு கொண்டு வந்து அங்கு விற்பனை செய்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார். ரெட்டி ஒரே மாதத்தில் சுமார் 8000 தக்காளி பெட்டிகளை அறுவடை செய்து விற்பனை செய்து 1.8 கோடி சம்பாதித்துள்ளார். மேலும் அவர் சீசன் முடிவதற்குள் சுமார் 2.5 கோடி சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சந்தையில் தக்காளி வரத்து குறைவான அளவு உள்ளதால் ஹைதராபாத்துக்கு தக்காளியை அனுப்பி வைத்து அங்கு கிலோ 100க்கு விற்பனை செய்து 15 நாட்களில் சுமார் 1.25 கோடி சம்பாதித்துள்ளார் மொத்த சாகுபடிக்கு 18 லட்சம் செலவாக ஆனதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 40 சதவீதம் பயிர்கள் இன்னும் வயலில் எஞ்சியுள்ளதாகவும் அது விரைவில் சந்தைக்கு வரும் எனவும் ரெட்டி தெரிவித்துள்ளா.ர் தற்போதைய சூழ்நிலையில் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் அலைவது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி அடையாத விவசாயி ஒருவர் கோடீஸ்வரராக இருப்பது மக்களை பெரும் ஆட்சர்யத்தில் முழ்கடித்துள்ளது.