தக்காளி விலை கேஸ் வேலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்..!திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!

  • தக்காளி விலை கேஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல் ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பல மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றம் அடைந்து உள்ளது.

இது குறித்து  திமுக  அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். விலைவாசி உயர்வு, நாடெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டி போடும் தக்காளி விலை, கேஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல் ஒன்றிய அரசு உடனே தலையிட்டு, உணவு பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Read Previous

செர்ரி பழத்தின் ஊட்டச்சத்துக்கள்..!!

Read Next

பப்ஜி காதலால் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய பெண், இந்திய குடியுரிமை வேண்டி கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular