தங்கத்தின் விலை இன்று (01.11.2023) சரிவு.. சவரன் எவ்வளவு தெரியுமா?..

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலத்தில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சில தினங்களாக குறைந்து வருவது பாமர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை:

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,715ஆகவும், சவரன், ரூ.45,720 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து,, 5,686 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 232 குறைந்து, ரூபாய் 45 ஆயிரத்து 488 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரங்களில் 46 ஆயிரத்தையும் தாண்டிய தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.77.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.77,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 7 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

வெற்றி நிச்சயம் கிடைக்கும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!!

Read Next

பிரதீப்புக்கு எதிரியாக மாறும் போட்டியாளர்கள்.. கன்பெஷன் அறையிலும் அரங்கேறும் சண்டை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular