
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை:
சென்னையில் தங்கத்தின் விலை ஜூலை மாத துவக்கத்திலிருந்தே தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க துவங்கியிருக்கிறது. அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4941 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 24 குறைந்து 47,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது மீண்டும் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்திருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து 5958 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 47, 672 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 77.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 144 உயர்ந்துள்ளதால் தாய்மார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.