தங்கம் விலை நேற்று ஜூலை 3ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதனபடி, இன்று (ஜூலை 4) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6760க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 54,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5537க்கும், சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.