“தங்கலான்” படத்தில் நடித்த மாளவிகாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடித்துள்ளார்.
இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் வித்யாசமான மிரட்டலான தோற்றத்தில் நடித்து மிரள வைத்துள்ளார். இப்படம் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து தற்போது வரை ரூ. 17 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நடித்த மாளவிகா மோகன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.