
தோல்விகளை சந்திக்காத ஜீவன்களை உலகத்தில் இல்லை நடைமுறை வாழ்க்கையில் வெற்றியைப் போல தோல்விகளும் உங்களுக்கு உதவுவதாக நிகழக்கூடியதுதான்…
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வெற்றியின் பாதையிலும் ஏராளமான தோல்வி தடங்கள் தென்படுவதே எதார்த்தம் ஆனால் குழந்தை பருவத்தில் இருந்தே தோல்வியை கூடாது எப்போதும் எதிலும் வெற்றியே வேண்டும் என்ற திணிக்கப்பட்ட மனநிலையில் வளர்த்தெடுக்கப்படுகிறோம்…
எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தோல்வி வழியில் பிடறும்போது பதறிப் போகிறோம் அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவும் காரணங்களை கற்பித்துக் கொள்ளும் முயற்சியாகவும் ஏதேனும் பற்றிக்கொள்ள தேடுகிறோம். சிலருக்கு அப்படியான காரணங்களில் கற்பிதங்களில் ஒன்றுதான் தற்கொலை முயற்சி. விபரீதம் புரியாத இந்த புதைக்குலி மனப்பான்மையில் கால் வைப்பவர்கள் தம்மை அறியாத ஒரு கட்டத்தில் புதைந்து போவதும் உண்டு இல்லை என்பது எல்லோருக்கும் உண்டு எனக்கு மட்டும் எதுவுமே இல்லை என்கிற எண்ணம்…
பிரச்சனைகள் சிறிதோ பெரிதோ அற்பமானதோ நேரடியாக சந்திப்பதும் போராட முயல்வதுமே ஆரோக்கியமான குணம் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் விடுபட்டு ஓட முயற்சிப்பதும் எதிர்மறை விளைவுகளை தரும்..
எப்போதுமே ஒரு எண்ணம் விபரீதமாக நிறுடினால் உங்கள் மனதிற்கு நெருக்கமான சற்று பக்குவமான நபரிடம் அதை பகிர்ந்து கொள்ள ஆரோக்கியமானது. அது வாரத்தை குறைக்கும் அவர்கள் தரும் அனுபவ ஆலோசனைகளை கூட சில சமயம் தீர்ப்பை தந்துவிடும் இது தவிர சூழ்நிலை மாற்றமும் அவசியம் தனிமையை தவிர்க்க வேண்டியது கட்டாயம்..!!