
வீட்டில் பீரோ என்பது கரெக்டான திசையில் வைக்க வேண்டும். இல்லையென்றால் பல சிரமங்களுக்கு நாம் ஆளாவோம். இந்நிலையில் எந்த திசையில் பீரோ வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டில் பீரோ வடமேற்கு திசையில் வைத்திருந்தால் பணத்தை நம்மால் சேமிக்கவே முடியாது. இதற்கு மாறாக நாம் கடனாளி தான் ஆவோம். ஆகவே ஒருபோதும் பீரோவை வடமேற்கு திசையை நோக்கி வைக்காதீர்கள்.
தென்கிழக்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் உங்களுக்கு பீன்ஸ் செலவுகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கும். இதனால் பணம் பற்றாக்குறை மற்றும் கடன் வாங்கும் நிலை கூட வரலாம்.
வீட்டில் இருக்கும் பீரோ தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து வைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியான செலவுகளை அது தரும். மற்றும் பணவரவு அதிகரித்து செல்வம் பெருகும். அதுமட்டுமின்றி சுப காரியங்கள் அதிகமாக நடக்கும். எனவே பீரோ வைக்கும் திசை எதுவென தெரிந்து அந்த திசையை நோக்கி வைத்து பயன் பெறுங்கள்.