கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பூதாகரமாக வெடித்துள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஹேமா கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்…
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து பெரிய பூகம்பத்தை வெடித்துள்ளது இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசி இருக்கின்ற வெங்கட் பிரபு சினிமாவைப் போல் ஊடகம் ஐடிஐ மற்றும் விளையாட்டு உட்பட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் இதை கடந்து செல்கின்றனர், ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இருக்க நமக்கு இடம் தேவை எனக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் தண்டனையை உறுதிப்படுத்தினால்தான் அதை செய்பவர்களுக்கு பயம் வரும் செய்யக்கூடாது என்ற எண்ணமும் வரும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் பெண்களை தவறாக பார்ப்பவர்களுக்கு தண்டனைகள் நாட்டில் இருக்கும் என்ற பட்சத்தில் அந்த தவறுதல் கூட நடப்பதற்கு வாய்ப்பே இருக்காது முடிந்தவரை ஹேமா கமிட்டி அறிக்கை நல்லதாகவே அமையும் என்று கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு..!!