தண்டுக் கீரையின் தனித்துவ நற்பண்புகள்.!! சிறுநீரகம், கல்லீரலுக்கு நல்லது.!!

கீரைகளில் ஏராள ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக கீரைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நமக்கு பல்வகை ஆனா ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் நம் உடலுக்கு கிடைக்கிறது.

முளைக்கீரை சற்று வளர்ந்து பெரியதானவுடன்  அதனை தண்டுக்கீரை என கூறுகிறோம். இந்த தண்டு கீரையில் இரண்டு வகை உள்ளது ஒன்று பச்சை நிறத்திலும் மற்றொன்று சிகப்பு நிறத்திலும் காட்சியளிக்கும். தண்டுக்கீரையை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சரியான பக்குவத்தில் சமைத்து அதனை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் பல்வேறு வகையான நன்மைகள் ஏற்படும். அப்படிப்பட்ட தண்டகீரையின் நன்மைகளைப் பற்றி பதிவில் தெளிவாய் காண்போம்.

இந்த தண்டு கீரையை கல்லீரல் பாதிப்புடையவர்கள் முறையாக பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெறுகிறது.

சிறுநீரில் கற்கள் உள்ளவர்கள் தண்டு கீரையை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் சிறுநீரகத்தின் வழியாக கற்கள் வெளியேறும். மேலும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் இதன் மூலம் வெளியேற்ற முடியும் .

அனைத்து வகையான கீரைகளும் நன்மை தரக்கூடியது. ஆனாலும் ஒவ்வொரு வகை கீரையிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் அடங்கியுள்ளது, இதில் தண்டு கீரை  பெண்களின் மாதவிடாய் கோளாறுக்கு தீர்வளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கண்டிப்பாக பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கருப்பை பலமடைந்து  அடைந்து அதில் உள்ள நச்சுக்களும் வெளியேறுகிறது.

இந்த கீரையை கருத்தரிக்க விரும்பும் பெண்கள் சாப்பிட்டால் விரைவில் அவர்கள் கருத்தரிக்க உதவுகிறது. அதேபோல் ஆண்கள் தண்டுக்கீரை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் அவர்களின் மலட்டுத்தன்மை நீங்கி உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்துகின்றது.

கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு தண்டுக்கீரை பெரும் அளவில் நம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் அந்த பிரச்சனை சரியாக குணமடையும். தண்டுக்கீரையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை சாப்பிடுவதால் அதை குணப்படுத்துகிறது.

தண்டுக்கீரையில் உள்ள சத்துக்கள் நாம் ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி நாம் உடலை பாதுகாக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள இது பெரிதும் உதவிகிறது.

Read Previous

கணவன், மனைவியாக சேர்ந்து மது அருந்தினால் இவ்வளவு நன்மைகளா.!! ஆய்வின் முடிவில் வெளியான தகவல்.!!

Read Next

ஒத்த கறிவேப்பிலையில், இத்தனை நன்மைகளா.!! முழு விபரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular