
குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் இவ்வளவு நன்மைகளா..?? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
உப்பு என்றாலே அனைவரின் ஞாபகத்திலும் வருவது உப்பு ருசியையும் கொடுக்கும் உப்பு ருசியையும் கெடுக்கும். ஏனென்றால் நாம் சமைக்கும் சமையலில் உப்பு சற்று அதிகமாக இருந்தால் அது சமையலையே கெடுத்து விடும். சற்று குறைவாக இருந்தால் சமையல் ருசியாக இருக்காது. அந்த காலத்தில் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று. இந்நிலையில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை குளிக்கும் நீரில் போட்டு குளித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் சொரி சிரங்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ,தோளில் அரிப்பு சருமத்தில் அரிப்பு இருப்பவர்கள் தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.