இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் ஏதாவது ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டுதான் இருக்கும். அப்படி சொட்டுவது வீட்டில் உள்ளவர்களுக்கும் அந்த வீட்டுக்கும் நல்லதே கிடையாது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பெரியோர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவரும் அறிய வேண்டும். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதால் நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஆன்மீக ஐதீகம்.
தண்ணீர் குழாய் நம் வீட்டில் எந்தப் பகுதியில் சொட்டு கொண்டு இருக்கவே கூடாது. இது லட்சுமி தேவிக்கு மிகவும் ஆகாது. இதனால் நம் வீட்டில் எந்த பகுதியில் எந்த பைப்பில் இருந்தும் தண்ணீர் சொற்றாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தண்ணீர் சம்பந்தப்பட்ட கிணறுகள், போர்வெல், அடி பம்பு போன்றவை நம் வீட்டுக்கு நேர் எதிரே இருக்கவே கூடாது. அப்படி நம் வீட்டிற்கு எதிரே இவை எல்லாம் இருந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உண்டாகி வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே நம் வீட்டிற்கு எதிரில் இவை எல்லாம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நமக்கும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. ஆறுகள் நதிகள் அருகில் இருப்பவர்கள் ஆறுகளில் நீராடினால் தோஷங்கள் நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் மற்றும் நமக்கு ஏற்படும் திருஷ்டிகள் என அனைத்தும் தொலையும். இவை எல்லாம் தொலைந்து நமக்கு புண்ணியம் சேரும் என்பதும் ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.