தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு..!! ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்..!

சென்னையில் உள்ள புழல் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தன் (வயது 46). இவர் கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்யும் நபராய் பணிபுரிந்து வருகிறார்.

கோவிந்தனின் மனைவி வசந்தா இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து தன்னந்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனிடையே கோவிந்தன் வசந்தாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் கோவிந்தனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இது கோவிந்தனின் மூத்த மகன் குப்புசாமிக்கு (வயது 26) தந்தையின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த மே 14ஆம் தேதி விநாயகபுரா பகுதியில்  தந்தையும் மகனும் சந்தித்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்து பின் அது கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த மகன் உருட்டு கட்டையால் தந்தையை சரமாரியாய் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் கோவிந்தன் பற்கள் உடையவே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் குப்புசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

#Breaking: மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!!

Read Next

பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!! என்னதான் நடந்தது..? பகீர் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular