• September 24, 2023

தந்தையின் மறதியால் தவித்து இறந்த பத்து மாத பிஞ்சு குழந்தை..!! காருக்குள் மூச்சு திணறி கொடூரமாக நிகழ்ந்த மரணம்..!!

போச்சுக்கள் நாட்டில் ஒரு விரிவுரையாளரான தந்தை கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் தனது குழந்தையுடன் காரில் சென்றிருக்கிறார். நர்சரி பள்ளியில் குழந்தையை இறக்கிவிட மறந்து போன அவர் நேரடியாக தனது யுனிவர்சிட்டிக்கு சென்று காரை நிறுத்தி விட்டு மாணவர்களுக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்.

7 மணி நேரம் கழித்து மீண்டும் தனது காருக்கு வந்த அவர் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் 10 மாத குழந்தை மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக அவசர சேவைக்கு அவர் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைகள் பரிசோதித்து விட்டு அவள் இறந்து கிடப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓடி வந்த தாய் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அவரும் கீழே விழுந்து அழத் தொடங்கினார். பின்னர் அவருக்கும் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருக்கையில் குழந்தை உறங்கி விட்ட நிலையில் அந்த குழந்தையை மறந்து விட்டதாக போலீஸிடம் தந்தை தெரிவித்திருக்கிறார். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்றாடம் வேலைக்கு செல்வதற்கு முன் குழந்தையை  நர்சரியில் தந்தை இறக்கிவிட்டு செல்வாராம். ஆனால் சம்பவ தினத்தன்று அதை மறந்து விட்டு சென்றிருக்கிறார். அதுவே குழந்தையின் இறப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Read Previous

குழந்தையின் டயப்பரில் மறைத்து வைத்த இரண்டு கிலோ தங்கம்..!!

Read Next

கவர்ச்சி நடிகை சோனா எடுத்த அதிரடி முடிவு..!! கதிகலங்கும் திரையுலகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular