Oplus_131072
1.♥தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்!
2.♥தந்தையின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ளுங்கள்!
அதனால் உங்களுக்குத் தான் மரியாதை கிடைக்கும்!
3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்!
அப்படிச் செய்தால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யும்!
4.♥தந்தை சொல்வதைக் கவனமாக கேளுங்கள்!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக்கூடாது!
5.♥தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்!
6.♥தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்!
அவரது ஒவ்வொரு அனுபவத்தையும் ஒரு பாடமாக எண்ணி நீங்கள் பயனடைந்து கொள்ளுங்கள்!
7.♥தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்!
8.♥தந்தை மிகவும் அழகான முறையில் நம்மைப் பாதுகாக்க கூடியவர் ஆவார்!
9.♥முகம் தெரியாத யார் யாருக்கோ மரியாதை செய்கிறோம்!
உன்னைக் கொஞ்சி வளர்த்த தந்தைக்கு மரியாதை செய்!
10.♥உன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விடாதே!
ஏனெனில் தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணி, தன் இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வாள்;
ஆனால் தந்தையோ, தான் பார்க்காத உலகத்தை தன் பிள்ளை பார்க்கட்டும் என்று தன் தோளில் தூக்கி வைத்துக் காட்டுவார்!
♥அவர் உன் அருகில் இருக்கும்போது பயன்படுத்திக் கொள்!
தந்தையைப் போல் உண்மையான நண்பன் உலகில் யாரும் இல்லை!




