தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி சாதனை படைத்த மாணவர்..!!

தமிழ்நாடு மாநில கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:30 மணி அளவில் தேர்வுகள் இயக்குநராகத்தால்  வெளியிடப்பட்டது, இந்த தேர்வு முடிவுகளிள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவி கவிதா ஸ்ரீ 500-க்கு அதிகபட்சமாக 499 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து பல மாணவர்கள் மாவட்ட வாரியாக சாதனையை அடுத்தடுத்து செய்திகளாக வெளியாகி பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு பின் மாணவர்கள் மேற்படி பதினொன்றாம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக் உட்பட்ட பிற படிப்புகளில் சேர விண்ணப்ப படிவத்தை வாங்கவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அவர்களின் எதிர்காலம் சிறக்க பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ஆம்பூர் பகுதியை சார்ந்த மாணவர் தீபிஸ்  என்பவரும் எழுதியிருந்தார்.

இவரின் தந்தை தேர்வை எட்டிய நாட்களில் மறைந்தார். தந்தை இறந்த துக்கத்தையும் பொறுத்துக் கொண்டு மாணவர் தீபிஸ் நல்லபடியாக தேர்வு எழுதி 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் .அதிகபட்சமாக தமிழ் தேர்வில் 73 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Read Previous

தேர்வு முடிவை தெரிந்துகொள்ளாமலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்..!! சென்னையில் சோகம்.!!

Read Next

15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை..!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular