
தந்தை உயிரிழப்பை தாங்க முடியாத மகன் மரணம்..!! சோக சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் வசித்து வந்தவர் லஸ்மையா (62). இவர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தையில் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவரது மகன் கிருஷ்ணம்ராஜ் (30) கதறி அழுதபடி இறுதி சடங்குகளை முடித்தார். அதன் பின்னரும் தந்தை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணம்ராஜூக்கு மாலை வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்தார்.