
தனக்கு கஷ்டம் வந்தாலும் அடுத்தவர்களையும் கொஞ்சம் பாருங்கள்..
நாம் தான் தனித்து நின்று நம் வாழ்நாள் முழுவதும் வரும் இன்ப துன்பங்களை கையாள வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை ஒருவனுக்கு வருகிறது.
1. அந்த தருணத்தில் வாழ்க்கையை மீண்டும் புதியதாக தொடங்குவதன் முக்கியத்துவத்தை அவன் அறிகிறான்.
2. அதிக பணம் இருந்தாலும் ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையின் மகிழ்ச்சியை உணர்கிறான்.
3. தேவைக்கு மீறிய பணத்தின் தேவையின்மையை பற்றி சிந்திக்கிறான்.
4. வெறும் தேவைக்காக மட்டுமே பழகும் தேவையற்ற உறவுகள் தெரியாமல் போகும்.
5. பணத்தையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத் தோன்றும்.
6. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கிடைக்கும் சிறு சிறு மகிழ்ச்சிக்கும் நன்றி உணர்வு வெளிப்படும்.
7. நல்ல உணவு முறை மற்றும் உடல் நலத்தின் முக்கியத்துவம் தெரிய ஆரம்பிக்கும்.
8. வாழ்க்கையில் என்ன இருந்தாலும், இல்லாமல் போனாலும் கஷ்டம் நிரந்தரமானது என்ற உண்மை புரியும்.
9. விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியைத் தந்துவிடாது.
10. வாழ்க்கையில் கிடைக்கும் சிறுசிறு விஷயங்களில் இருந்தும் மகிழ்ச்சியை மனம் எடுத்துக் கொள்ள முற்படும்.
11. தனிமையை மனம் கொண்டாடும்.
12. கஷ்டங்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை மேலிடும்.
13. ஒவ்வொரு நாளையும் புதிய வாய்ப்பாக எண்ண ஆரம்பிப்பீர்கள்.
14. தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மனம் பிறரைத் தேடாது.
15. முற்றிலும் புதிய பாதையில் வாழ்க்கை நகர ஆரம்பிக்கும்.