கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர் ஷிகர் தவான் இவர் தனது இணையதள பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்..
இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது ஓய்வை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாகவும் இன்று ஆகஸ்ட் 24 அறிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறியது எனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு வரலாற்றை படைத்துள்ளேன் அதில் எண்ணற்ற ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ளேன் என்றும் இதில் எனக்கு எண்ணற்ற நினைவுகள் கிடைத்தது அது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று கூறியுள்ளார், என் மீது காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார், இந்தியாவுக்காக 34 டெஸ்ட்,167 ஒரு நாள் போட்டி, 68 டி 20, விளையாடி பெருமை சேர்த்துள்ளார்..!!