தனது பதவியை ராஜினாமா செய்கிறாரா பிரதமர் மோடி..!! பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது மத்திய அமைச்சரவை..!!

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ண பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு எட்டு மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாஜக 240 இடங்களில் முன்னிலை பெற்றது என அறிவித்திருந்தனர்.

மேலும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 50 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 99 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 134 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இந்த தேர்தலை பொருத்தவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது.

அதே சமயம் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தல் கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் இணைத்து மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு உண்டான பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை  11 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக பரப்பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வெற்றி தோல்வி நிலவரங்கள் குறித்தும், அடுத்து மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்தும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணி 400 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பெரும் நம்பிக்கையுடன் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் தற்பொழுது ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜக தற்பொழுது தவித்துக் கொண்டுள்ளனர் .

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி பாஜக உள்ளது. பெரும்பான்மை கிடைக்காத பாஜகவிற்கு இது தோல்விதான் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாய் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் பாரத பிரதமர் மோடியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தோல்வியை ஏற்றுக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தந்த இந்த தேர்தல் முடிவை வெற்றியாகவே கருதி தனது twitter பக்கத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

Read Previous

தற்காலிக தடைகளை தாண்டி நாம் இலட்சிய பயணம் மீண்டும் தொடரும்..!! டிடிவி தினகரன் உருக்கம்..!!

Read Next

இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த டிஜிபி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே மோதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular