தனது மனைவிக்காக அங்கப்பிரதிஷ்டணம் செய்த நடிகர் சரத்குமார்..!! இதுதான் காரணமா..?

தற்பொழுது இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுற்றது. மேலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கப்பிரதிஷ்டணம்  செய்துள்ளார். 31.08.2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி பின் அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 12ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனரான நடிகர் சரத்குமார் கட்சியை கலைத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் அவர் இணைந்து கொண்டார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது .அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. மேலும்  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார். நடிகை ராதிகா சரத்குமார் ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்கு பதிவுகளும் நடைபெற்ற நிறைவடைந்த நிலையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரின்  கணவர் நடிகர் சரத்குமார் தான் மனைவி வெற்றி பெற வேண்டும் என்று விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் அங்கப்பிரதிஷ்டணம் செய்துள்ளார்.

Read Previous

தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பாஜக வெளியிட்ட வீடியோ..!! பாஜகவுக்கு எதிரான கொந்தளிக்கும் அதிமுக..!!

Read Next

இன்று முதல் கோடை விடுமுறைக்கு பின் வழக்கம்போல் இயங்கும் சென்னை மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular