
பழம்பெரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (வயது 60) தொழிலதிபர் ரூபாலி பருவாவை வியாழக்கிழமை கொல்கத்தா கிளப்பில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமண புகைப் படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர்கள் முதல் சந்திப்பை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இது ஒரு நீண்ட கதை என்றும் அதை வேறு நேரத்தில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.மேலும் தனது இந்த இரண்டாவது திருமணம் தனது வாழ்வில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
மறுபுறம் திருமணம் குறித்து ரூபாலி பருவா கூறுகையில் “நாங்கள் சில காலத்திற்கு முன்பு சந்தித்து அதை முன்னோக்கி கொண்டு செலவு முடிவு செய்தோம். ஆனால் எங்கள் திருமணம் ஒரு சிறிய குடும்ப விஷயமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்பினோம்”, என்று கூறியுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.