திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சார்ந்த விவசாயி ஒருவருக்கு கணவரை இழந்த பவித்ரா( வயது 24) என்ற பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாய் மாறியது.
இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். இந்நிலையில் ஒரு நாள் பவித்ரா அந்த விவசாயிகைக்கு தொடர்பு கொண்டு நாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்துள்ளார். அதன்படி பவித்ரா அந்த விவசாயியை பழனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பவித்ராவுடன் வேறொரு பெண்ணும் இருந்துள்ளார்.
இருவரிடமும் விவசாயி உல்லாசமாக இருந்துள்ளார், அந்த சமயத்தில் திடீரென அறைக்குள் நுழைந்த மூன்று ஆண் நபர்கள் விவசாயி வீடியோ எடுத்து அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பிடுங்கி சென்றனர், அது மட்டும் இன்றி விவசாயி செல்போன் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர், பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர். சம்பவம் விவசாயி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.