
வாழ்க்கை : வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதனால் அந்த வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்த வண்ணம் வாழ வேண்டும் பிறர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வாழக்கூடாது. என்னதான் அனைவருக்கும் ஒரு குடும்பம் என்று இருந்தாலும் அவரவருக்கு ஒரு தனி வாழ்க்கையும் இருக்கிறது..
ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கான வாழ்வை புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவங்களை பெறவும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி தனியாக நாம் இந்த வாழ்வில் தவறாமல் செய்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள். உலகில் இருக்கும் பல்வேறு விஷயங்களை பார்க்கவும் அது குறித்து ஆராய்ச்சி செய்யவும் இந்த பயணம் என்பது நமக்கு உதவும் அதன்படி நமக்கு பிடித்த இடங்களுக்கு பஸ், கார், ரயில், விமானம், பைக் உள்ளிட்ட உங்களுக்கு பிடித்தமான உள்ளில் சோலோ ட்ரிப் செல்லுங்கள் புதிய விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும் மனதும் இலகு அடையும். பொதுவாகவே கடல் என்றால் அழகுதான் ஆனால் ஒருவர் ஸ்கூபா டிரைவிங் செய்வதன் மூலம் கடலில் மேற்புறம் மட்டுமல்லாமல் அடியில் இருக்கும் அழகையும் நம்மால் ரசிக்க முடியும், வண்ண வண்ண மீன்களை காணலாம் கடலின் அடிப்பகுதியில் மறைந்திருக்கும் பல்வேறு அதிசயங்களையும் ரகசியங்களையும் குறித்து தெரிந்து கொள்ள முடியும், பிறருக்கு உதவி செய்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு ஏதேனும் நம்மால் பெற முடியாது அதனால் ஏதேனும் தன்னார்வ தொண்டுகள் அல்லது முகாமில் சில காலம் தங்கி உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் இது புது புது அனுபவம் மற்றும் புதிய பாடத்தினை நமக்கு கற்பிக்கும், ஏதேனும் மியூசியம் அல்லது கலை சார்ந்த கண்காட்சிகளை சென்று காண தயக்கம் காட்டாதீர்கள் அங்கு நாம் சென்றால் பல்வேறு விஷயங்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அங்கிருக்கும் சிலைகள் ஓவியங்கள் பின்னால் பல்வேறு வரலாறு கதைகள் இருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் மன அழுத்தம் குறைவதற்கு பாடல்களை கேளுங்கள் பாடல்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து மனதை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமையலில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் சமைப்பது உங்கள் மனதை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்..!!