தனியார் சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை..!!

கயத்தாறு அருகே தனியார் சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெரியகுருவு மகன் காளிமுத்து (30). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கயத்தாறு அருகே மானங்காத்தானில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு நண்பர்களுடன் 10 பேர் வேலைக்காக வந்துள்ளார்கள். மானங்காத்தானில் ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காளிமுத்து, தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை நண்பர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன காளிமுத்துவிற்கு, காவேரி (24) என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.

Read Previous

தைராய்டு பிரச்சனையை போக்க.. சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!!

Read Next

உள்ளாடை வெளியே தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த துஷாரா விஜயன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular