தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கின்றது. பல செய்தி வாசிப்பாளர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக முதலில் தனது திரைப்படத்தை தொடங்கியவர் தான்.
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் திவ்யா துரைசாமியும் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கியவர். இப்படி ஏகப்பட்ட பிரபலங்களை நாம் கூறிக்கொண்டே போகலாம். பிக் பாஸில் கலக்கி வந்த லாஸ்ட்லியாவும் செய்து வாசிப்பாளர் தான். இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான பலரும் சினிமாவில் சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் செய்தி வாசிப்பாளருக்கு என்று தனி மரியாதையும் இருக்கின்றது. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரபலம் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் சௌந்தர்யா அமுதமொழி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அதில் மருத்துவமனையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு கிராஃப்ட் செயல்பாடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எலும்பு மஜ்சையானது அதன் செல்களை உற்பத்தி செய்யும் தன்மையை இழந்து விட்டது, அதுமட்டுமில்லாமல் கொடிய APLASTIC ANEMIA என்ற ரத்தப் புற்று நோயும் தனக்கு வந்துள்ளதால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எனக்கு பண உதவி தேவைப்படுகின்றது என கேட்டு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக இணையதள பக்கங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகி வருகின்றது. இந்த நோய் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்திருக்கின்றார். இவரின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.