தனியார் பள்ளிகளில் இலவச கல்வி விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள்..!! மேலும் தகவல் உள்ளே..!!

தமிழக முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டடத்தை அரசை ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கை பெற விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் ஆர்.டி.இ சட்டத்தில் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது இதனால் விருப்பமுள்ள பெற்றோர்கள்  http://rteadmission.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read Previous

உயிருக்கு கெடுவைத்த மருத்துவர்கள்.!! சுயமாக மருந்து கண்டுபிடித்து மூளை புற்றுநோயில் இருந்து மீண்ட மருத்துவர்.!!

Read Next

ஒரே நாளில் 179 வழக்குகள்..!! திருவாரூரில் தீவிரமடையும் கஞ்சா குட்கா விற்பனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular