தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு..!! மகிழ்ச்சியில் மக்கள்.!!

தனியார் நிறுவனமான ஹட்சன் பால் விலையை லிட்டருக்கு ரூ.2, தயிர் கிலோவுக்கு ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பாக்கெட்) விற்பனை நிறுத்தவுள்ளது. இதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பாலினை(ஊதா நிற பாக்கெட்) அதே விலையில் விற்கவுள்ளது. இந்நிலையில் ஹட்சன்(ஆரோக்யா) 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள பாலுக்கு லிட்டருக்கு ரூ.2, தயிர் ஒரு கிலோவுக்கு ரூ.8 விலையை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை குறைத்தால், ஆவின் பால் வாங்குவதை மக்கள் படிப்படியாக குறைத்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் 27-11-2023..!!

Read Next

ரயிலில் கஞ்சா கடத்திய ஆந்திரா இளைஞர் அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular