தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 19 வயது இளம்பெண் பரிதாப பலி..!! தந்தை கண்முன் நடந்த சோகம்.!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். வேலூரில் இருந்து பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரப்பாக்கம் நோக்கி தனது இரண்டு மகள்களுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதேசமயம் பெருமுகப்பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் இருசக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் வெங்கடேசன் இயக்கிய நிலையில் அவ்வழியாக வந்த தனியார் பேருந்து வெங்கடேசனின் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து மூவரும் தவறி கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரின் இரண்டாவது மகள் ஸ்வேதா மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் சுவேதா தனது தந்தை மற்றும் சகோதரியின் கண் முன்னே பரிதாபமாய் உயிர்  இழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சமத்துவச்சாரி காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்,மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

வாட்டர் ஹீட்டரில் வெளியேறிய கார்பன் மோனாக்சைடு; 6 மாத கர்ப்பிணி பரிதாப பலி..!! சிறுவன் உயிர் ஊசல்.!!

Read Next

19வது சுனாமி நினைவு தினம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular