• September 24, 2023

தனியார் வங்கி மூலம் கடன்..!! பெண் என்ஜினீயரிடம் இருந்து லட்ச கணக்கில் பண மோசடி..!! பெரும் அதிர்ச்சி..!!

தனியார் வங்கி மூலம் கடன். பெண் என்ஜினீயரிடம் இருந்து லட்ச கணக்கில் பண மோசடி.தர்மபுரி, பாலக்கோடு அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ். இவரது மனைவி ஆனந்த பிரியா (வயது 28) இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு நேற்று தனியார் வங்கி மூலம் ரூ. 10 லட்சம் கடன் தங்களுக்கு வந்துள்ளதாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
இதனை உண்மையான நம்பிய ஆனந்தபிரியா அந்த லிங்கை கிளிக் செய்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 11 லட்சம் பணம் காணாமல் போய்விட்டது.

இது தொடர்பாக ஆனந்த பிரியா சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பணம் பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் இன்ஜினியரிடம் கடன் தருவதாக தெரிவித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பல்லடம் படுகொலையில் மூன்றாவது குற்றவாளி கைது..!! தனிப்படை போலீஸ் அதிரடி திட்டம்..!!

Read Next

சைக்கிள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular