தனியார் விடுதியில் பாலியல் தொழில்..!! 3 பேர் கைது..!!
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (செப்.,21) விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு அறையில் 3 பெண்கள் தங்கி இருந்ததும், அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து விடுதி உரிமையாளர் பொன்வேந்தன், மேலாளர் முருகன், கணேசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.




