தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்கள் பல படங்களை இயக்கியும், நடித்தும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார், மேலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தொடர்ந்து தனுஷ் அவர்கள் நடித்த வந்த பல படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது அதிலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் அன்பு ஆதரவும் கிடைத்துள்ளது, தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது, சிறந்த நடிகை நித்யா மேனன் என்றும் சிறந்த நடன இயக்குனர் ஜான் மாஸ்டர் (மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே) பாடலுக்கு 70 ஆவது தேசிய விருதினை வழங்குவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது, இதனால் திருச்சிற்றம்பலம் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருக்கின்றனர்..!!