தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (ஜன.09) நடந்த ‘உங்க கனவ சொல்லுங்க’ நிகழ்ச்சியில் பேசிய அவர், “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு தனி கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி. எந்த ஆதிக்க சக்திக்கும் தலைகுனியாமல் நிமிர்ந்து நிற்கிறோம்” என்றார்.




