தன்னை மறந்த காதலியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் பானூர் பாரதியை சார்ந்த பெண்மணி விஷ்ணு பிரியா. இவரின் முன்னாள் காதலர் ஷியாம் ஜித் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஷியாம் ஜித் பயங்கர ஆயுதங்களுடன் வந்து முன்னாள் காதலி விஷ்ணு பிரியாவை படுக்கை அறையில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார், பெண்ணின் கழுத்து, கைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் நடந்த படுகொலை சம்பவம் அன்று கண்ணூர் மாவட்டத்தையே உலுக்கியது. மேலும் ஷியாம் ஜித் கைது செய்து விசாரணை நடந்தியதை தொடர்ந்து அவர் சைக்கோ கொலையாளி படத்தை பார்த்து தன்னை விட்டு பிரிந்த காதலியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தலச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஷியாம் ஜித்தை கொலையாளி என உறுதி செய்துள்ளனர், மேலும் குற்றவாளிக்கு மே மாதம் 13-ஆம் தேதி தண்டனை தொடர்பான அறிவிப்பை கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read Previous

8 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரன்..!! உடலெல்லாம் கடித்து வைத்து சித்தரவதை.!!

Read Next

இரயில் பயணத்தில் சாகசம்..!! ஓடும் இரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular