தன்பாலின திருமண வழக்கில் 4 மாறுபட்ட தீர்ப்பு..!!

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்றும், ஆனால் சட்டத்தின் ஷரத்துக்களை கையாள முடியும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்கப்படாத விஷயங்கள் இப்போது ஏற்கப்படுகின்றன. ஓரினச்சேர்க்கை அல்லது தன்பாலின ஈர்ப்பு திருமணம் என்பது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கு மட்டும் காணப்படுவது அல்ல. தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கர ராவ் காலமானார்..!!

Read Next

நவராத்திரி விரதம்; மூன்றாம் நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular