
நமது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் துறையில் 44,228 இடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்டு வந்தது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் , உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் , டக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் வெளியானது.
இத்தகைய பணியிடங்களுக்கு 10-வதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் . இந்த பதவிகளுக்கு எந்த விதமான தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. மேலும் நல்ல கணினி அறிவு மற்றும் வாகனங்கள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு 18 முதல் 40 வரை மட்டுமே வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது.
இத்தகைய பணிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அதிகாரபூர்வமான (https://indiapostgdsonline.gov.in/) என்ற இணையத்தளத்தில் வெளியாக உள்ளது.