தபால் துறையில் மாதாந்திர வருமானத் திட்டம்..!! முழு விவரங்களுடன்..!!

இந்திய தபால் துறையானது நாட்டு மக்களுக்கு உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் சேமிப்பதற்கு ஒரு சூப்பர் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கென்று தனி வட்டி வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களால் கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும்.

ஒரு முறை முதலீடு செய்தல் 5 ஆண்டுகள் வரை வட்டி வழங்கப்படும். தற்போது POMIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த அசல் தொகையையும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் டெபாசிட் தொகையை நீட்டித்துக் கொள்ள முடியும்.

Read Previous

மூட்டு வீக்கங்களை போக்கும் உத்தமாணி மூலிகை..!!

Read Next

SSC ஆணையத்தில் வேலை..!! சம்பளம்: ரூ.34,800/- | உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular