பிரபல நடிகை தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது அவர் ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஒரு சில படங்கள் சர்ச்சையை கிளப்பியது. அதிலும் ஒரு படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
அதை வைத்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. இதையடுத்து கொஞ்ச நாட்களிலே அவர்கள் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் வர்மா குறித்து இணையத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகை தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது Vitiligo எனப்படும் நோயால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் இதைப் பார்த்து பயந்த அவர் நாளடைவில் படங்களில் பிஸியானாதால் இதை மறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொற்று நோய் என்ற அபாயம் இல்லை என்றாலும் கூட, அதை குணப்படுத்தும் மருந்து இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.