
தமிழக அரசின் சாதனை விளம்பரம் போஸ்டர்களில் இடம் பெற்ற வைரல் பாட்டி வேலம்மாள் உடல் நலக்குறைவின் காரணமாய் இயற்கை உள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் புகைப்பட கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. இவர் கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளின் சிகிச்சை அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்தல், தொடங்கி நோயாளி இறப்புக்கு பின் எறியூட்டப்பட்டது வரை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்கள் போன்றவற்றில் வெளியிட்டார்.
மேலும் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் வகையில் தனித்திறன் மிக்க புகைப்படங்களாகவும் இவர் எடுத்து வருகிறார். அதன்படியாக தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு சிரித்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்கின்ற பாட்டியை இவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் வைரலாகியது.
இந்த புகைப்படத்தின் மூலம் வேலம்மாள் பாட்டி தமிழக முழுவதும் பிரபலமானார். இந்த புகைப்படத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் “இந்த ஏழையின் சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு”என்று தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த ஆண்டு மழை பாதிப்புகளை பார்வையிட குமரிக்கு வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்துள்ளார். மேலும் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் வேலம்மாள் பாட்டிக்கு அரசு சார்பில் அஞ்சு கிராம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. மேலும் அதற்கு கட்ட வேண்டிய குறைந்தபட்ச தொகையையும் திமுக நிர்வாகி பூதலிங்கம் பிள்ளை என்பவர் கட்டினார். இந்நிலையில் நாகர்கோவிலில் புத்தேரி பகுதியில் வசித்து வந்த வேலம்மாள் பாட்டி உடல் நல குறைவின் காரணமாக நேற்று இரவு இயற்கை எய்தினார். தற்போது பாட்டியின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.