தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவருக்கு திடீரென இருதய அறுவை சிகிச்சை..!!

புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் இரண்டாம் இடம் பெற்றார். ஏற்கனவே இந்த தொகுதிகளில் பலமுறை போட்டியிட்டு தோல்வி கண்ட ஏசி சண்முகம் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டாம் இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது .இதனை தொடர்ந்து ஏசி சண்முகம் சென்னை நுங்கம்பாக்கம் எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் “பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் ஏசி சண்முகத்திற்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்ற முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளார். ஒரு மாத காலம் அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து..!! பதறவைக்கும் வீடியோ.!!

Read Next

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு மாடுகளை பலி கொடுக்க தடை..!! சென்னை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular