தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர் சரிவை சந்திக்கும் அதிமுக..!!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு  அகில இந்திய திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து தோல்வியினை சந்தித்து வருகின்றது. இந்த முறை 32 தொகுதிகளில் போட்டியிடும் ஒரு இடம் போட்டியிடும் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தலாகும். அந்த தேர்தலில் “இந்த லேடியா..? அல்லது மோடியா..?” என்று அவர் பிரச்சாரம் முழக்கம் தமிழகம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

அது மட்டும் இன்றி 44% வாக்குகள் பெற்று சாதனை அடைந்தது. அவரது மறைவுக்கு பின்பு அதிமுக சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024 உள்ளிட்ட இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியவே சந்தித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, பாரதிய ஜனதா, புதிய நிதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது.

அதிமுக இருபது இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அதிமுகவிற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்துள்ளது. இதுதான் அதிமுக வரலாற்றில் அந்த கட்சிக்கு கிடைத்த மிக குறைந்தபட்ச வாக்கு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

உங்களிடம் தலை வணங்குகிறேன்..!! பாரத பிரதமர் நரேந்திர மோடி பதிவு..!!

Read Next

தற்காலிக தடைகளை தாண்டி நாம் இலட்சிய பயணம் மீண்டும் தொடரும்..!! டிடிவி தினகரன் உருக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular