தமிழகத்திற்கு கூடுதலான பேருந்துகள் இயக்க திட்டம்..!! போக்குவரத்து கழகம் தகவல்..!!
தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 955 பேருந்துகளும் , சென்னை கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும் மற்றும் சென்னை மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.




