தமிழகத்தில் அடுத்தடுத்து வரும் தேர்தல்..!! சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற முடிந்தது. ஆனால் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

அதன்படி காந்திபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

2026 ஆம் ஆண்டு வரை ஆயுட்காலம் உள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து மொத்தமாக அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவு வெளியான கையோடு அடுத்தடுத்ததாக ஊரக உள்ளாட்சி தேர்தல் , அடுத்தது சட்டமன்ற பொது தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

பள்ளிகள் மருத்துவமனையை தொடர்ந்து திகார் சிறைக்கும் வந்த வெடிகுண்டு விரட்டால் மின்னஞ்சல் காவல்துறையினர் தீவிரம்..!!

Read Next

சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!! கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular