தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக காற்றுடன் மிதமான மழை ஆங்காங்கே பெய்து கொண்டு வந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது மேலும் இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது, மேலும் மிதமான காற்றுடன் ஒரு சில இடங்களில் மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது, இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது…!!